தைப்பூச விழாவை முன்னிட்டு முன்பதிவில்லா ரயில் இயக்கம்
சேலம்: தைப்பூச விழாவை முன்னிட்டு, கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழனியில் பிப்.,11ல், தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்-தர்கள் பழனிக்கு பயணிப்பர். இவர்களின் வசதிக்காக, கோவை--திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அறிவிக்கப்-பட்டுள்ளது.இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்-கையில் கூறியிருப்பதாவது:கோவை-திண்டுக்கல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில், பிப்., 5 முதல், 14 வரை, காலை 9:35 மணிக்கு புறப்பட்டு போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்-டன்சத்திரம் வழியே மதியம், 1:10 மணிக்கு திண்டுக்கல் சென்ற-டையும்.திண்டுக்கல்-கோவை முன்பதிவில்லாத சிறப்பு ரயில், பிப்., 5 முதல், 14 வரை மதியம், 2:00 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்-திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்க-டவு, போத்தனுார் வழியே மாலை, 5:50 மணிக்கு கோவை வந்து சேரும். இதில், 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.