உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விடுமுறை முடிந்து ஊர்களுக்கு திரும்பியதால் சேலம் பஸ் ஸ்டாண்டில் கட்டுக்கடங்காத கூட்டம்

விடுமுறை முடிந்து ஊர்களுக்கு திரும்பியதால் சேலம் பஸ் ஸ்டாண்டில் கட்டுக்கடங்காத கூட்டம்

சேலம்: பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கடந்த, 1ல் இருந்து 5 வரை ஆயுதபூஜை, மற்றும் பண்டிகை விடுமுறை நிறைவடைந்ததை முன்னிட்டு, மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்பியதால் சேலம் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காலாண்டு தேர்வு முடிந்ததும், விடுமுறையை கொண்டாட அவரவர் உறவினர் வீடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு மாணவ, மாணவியர் சென்றனர். மேலும் ஆயுதபூஜைக்காக தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள், பள்ளி கல்லுாரி, மாணவ, மாணவியர், உறவினர்கள் மீண்டும் அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதன் காரணமாக சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று காலை முதலே பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.இதே போல சேலம் ரயில்வே ஸ்டேஷனிலும், வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, ரயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி