வி.ஏ.ஓ., சங்க நிர்வாகிகள் தேர்வு
சேலம்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அதற்கு மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு நடந்தது. பின் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் மாநில தலைவராக சசிகுமார், பொதுச்செயலர் குமார், பொருளாளர் தியாகராஜன், மாநில செயலர்கள் உதயசூரியன், புஷ்பகாந்தன், துணைத்தலைவராக ஜான்போஸ்கோ வெற்றி பெற்றனர்.