உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழை பொழிய வருண ஜபம்

மழை பொழிய வருண ஜபம்

சேலம்:சேலம், எருமாபாளையம் ஏரிக்கரையில் உள்ள ராமானுஜர் மணிமண்டபத்தில் நேற்று வருண ஜபம் நடந்தது.இதில் திருக்கோவிலுார் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ராமானுஜச்சாரியார் சுவாமிகள் தலைமையில் ஆந்திராவின் ஸ்ரீமத் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள், வடுவூர் கனபாடி கோவிந்தாச்சார்ய சுவாமிகள், மன்னார்குடி ஸ்தானீகம் வேங்கடேச தீட்சிதர் சுவாமிகள், பட்டாச்சாரியார்கள் சேர்ந்து, செயற்கை குளத்தில் இடுப்பளவு நீரில் நின்றபடி வேத மந்திரங்களை உச்சரித்து, மழை பொழிந்து வெப்பம் தணிய வேண்டி வருண ஜபம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள், ஆண்டாள் நாச்சியார் அருளிய, 'ஆழி மழைக்கண்ணா' என தொடங்கும் பாசுரத்தை பாராயணம் செய்து கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை, ஸ்ரீபகவத் ராமானுஜ கைங்கர்ய சொசைட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை