வி.சி., கட்சி போராட்டம்
ஓமலுார், வி.சி., சார்பில், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சேலம் வடக்கு மாவட்ட செயலர் தெய்வானை தலைமை வகித்தார். அதில் துாத்துக்குடி வாலிபர் கவினை ஆணவ கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்; ஆணவ கொலை நடக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோஷம் எழுப்பினர். ஏராளமானோர் பங்கேற்றனர்.