மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
22-Dec-2024
மேட்டூர்: அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, கொளத்துார் பஸ் ஸ்டாண்டில் வி.சி., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஒன்றிய செயலர் சேட்டுகுமார் தலைமை வகித்தார். அதில், அமைச்சரை கண்டித்து கோஷம் எழுப்பினர். பேரூர் செயலர் அம்மாசி, மகளிரணி துணை செயலர் தில்லைக்கரசி, மாவட்ட செயலர் ராசாத்தி, துணை செயலர் கோகிலா, சட்டசபை தொகுதி செயலர் சிவா உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் வி.சி., கட்சி மகளிரணி சார்பில், ஓமலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் வடக்கு மாவட்ட மகளிரணி பொருளாளர் கனகா தலைமை வகித்தார். அதில் அமித் ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.கொங்கணாபுரத்தில் மா.கம்யூ., கட்சியினர், மாவட்ட செயலர் சண்முகராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலர் முத்துசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
22-Dec-2024