உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் உள்ள 13 உழவர் சந்தைகளில் ரூ.1.27 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

சேலத்தில் உள்ள 13 உழவர் சந்தைகளில் ரூ.1.27 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

சேலம்: மார்கழி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளில், 1.27 கோடி ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் விற்பனை நடந்தன.சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அம்மாபேட்டை, ஆத்துார், மேட்டூர் உள்பட, 13 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. நேற்று மார்கழி அமாவாசையையொட்டி, சந்தையில் பழங்கள், வாழைக்காய், வாழை இலை, அகத்திகீரை உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகமாக நடந்தது. சந்தையில் தக்காளி கிலோ, 14-18 ரூபாய், உருளைக் கிழங்கு 46-64, சின்னவெங்காயம், 60-64, பெரிய வெங்காயம், 50, பச்சைமிளகாய், 44-46, கத்தரி, 40-48, வெண்டைக்காய், 36, முருங்கைக் காய், 200, பீன்ஸ், 90-100, அவரை, 80-90, கேரட், 65-70 என விற்பனையானது. பப்பாளி கிலோ, 30, கொய்யா கிலோ, 50-80, மாதுளை, 180, சாத்துக்குடி, 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.மொத்தமுள்ள, 13 உழவர் சந்தைகளுக்கு, 1,037 விவசாயிகள், 244.05 டன் காய்கறிகள், 44.39 டன் பழங்கள், 0.76 டன் பூக்கள் உள்பட மொத்தம், 300.47 டன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதை, 72,729 நுகர்வோர், 1.27 கோடி ரூபாய்க்கு வாங்கி சென்றனர்.சூரமங்கலம் சந்தையில் அதிகபட்சமாக, 21.35 லட்சம் ரூபாய், குறைந்தபட்சமாக மேச்சேரியில், 1.45 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த கார்த்திகை அமாவாசையையொட்டி, உழவர் சந்தைகளில், 1.34 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை