உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலால் அவதி

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலால் அவதி

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலால் அவதிஏற்காடு, டிச. 29-ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, சனிக்கிழமையான நேற்று, ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்திருந்தனர். படகு இல்லம், அண்ணா, ஏரி, சூழல் சுற்றுலா பூங்காக்கள், ரோஜா தோட்டம் ஆகிய இடங்களை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். படகு இல்லத்தில் பயண சீட்டு வாங்கி, வெகுநேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.ஆனால் சுற்றுலா பயணியர் வந்த கார், பைக்குகளை, முக்கிய சாலைகளான அண்ணா பூங்கா, படகு இல்ல சாலைகள் ஓரம் நிறுத்திவிட்டு, சுற்றிப்பார்க்க சென்று விட்டனர். இதனால் அந்த சாலைகளில் காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். நெரிசலை சரிசெய்ய, போலீசாரும் சிரமப்பட்டனர்.விடுமுறை நாட்களில், போக்குவரத்தை சரிசெய்ய சேலத்தில் இருந்து, 20க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். நேற்று, 10 போலீசார் மட்டும் வந்ததால் போக்குவரத்தை சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை