விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா
சேலம்: சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழா, பெரிய சீரகாபாடியில் உள்ள விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சரவணன், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை துணை வேந்தர் சுதிர், இணை துணை வேந்தர் சபரிநாதன் ஆகியோர், அனைத்து பட்டதாரிகளை வாழ்த்தி பட்டங்கள், பதக்கங்களை வழங்கினர். அதன்படி இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் உள்பட, 171 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அவர்களில், 8 பேர் தங்கம், 7 பேர் வெள்ளி, 2 பேர் வெண்கல பதக்கங்களை பெற்றனர்.இதில் பல்கலை இயக்குனர் ராமசாமி, பதிவாளர் நாகப்பன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மணிவண்ணன், இயக்குனர் ராஜன் சாமுவேல்(அகடெமிக்ஸ்), விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் எழில்வேந்தன், வாரியார் நிர்வாக குழு உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், நிர்வாக பணியாளர்கள், பட்டதாரிகளின் பெற்றோர் பங்கேற்றனர்.