விநாயகா மிஷன்ஸ் பல்கலை அணி தேசிய கபடி போட்டிக்கு தகுதி
சேலம்: சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை கழக கபடி அணி, கர்நாடகாவின் பெல்காவியில் நடந்த, தென் மண்டல பல்கலை கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தது.போட்டியில் தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளுடன், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை கழக கபடி அணி, தென் மண்டலத்தின் முதல் நான்கு அணிகளில் ஒரு இடத்தை பிடித்தது, இதன் மூலம் அகில இந்திய பல்கலை கழகங்களுக்கு இடையேயான கபடி சாம்பியன் ஷிப்பில் இடம் பெற்றது.பட்டம் வென்றவர்களை, சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளை அறங்காவலர் அன்னபூரணி சண்முகசுந்தரம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டத்தோ சரவணன், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை கழக வேந்தர் கணேசன், துணைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்தினர்.விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் சுதிர், இணை துணைவேந்தர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன், மாணவர் நலன் இயக்குனர் சண்முகசுந்தரம், விநாயகா மிஷன்ஸ் உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் சரவணன், முன்னாள் இந்திய கபடி வீரரும், சேலம் மாவட்ட கபடி கழக செயலாளருமான சாமியப்பன் ஆகியோர் ஊக்கப்படுத்தினர்.கபடி போட்டியில் நான்காவது இடத்தை பிடித்து, 2025 அக்., 13 முதல் 17 வரை உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கல்கோடியாஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெறும், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கபடி சாம்பியன் ஷிப்பிற்கு தகுதி பெற்று வரலாற்று மைல்கல்லை எட்டினர்.