உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாக்காளர் வழிகாட்டி குறிப்பு 11 தொகுதிக்கு அனுப்பும் பணி

வாக்காளர் வழிகாட்டி குறிப்பு 11 தொகுதிக்கு அனுப்பும் பணி

சேலம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்-கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி சேலத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு வழிகாட்டி குறிப்புகள் அடங்கிய விழிப்புணர்வு பிரதி வழங்கப்-பட உள்ளது.அதனால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் இருந்து, விழிப்புணர்வு பிரதிகள், தொகுதி வாரியாக அனுப்பும் பணி நேற்று நடந்தது. அதில், 'தொகுதியில் ஒரே ஒரு உறுப்பினரை மட்டும் தேர்ந்தெடுக்க, உங்களுக்கு ஒரு ஓட்டு மட்டும் உண்டு என்பதை தயவு செய்து நினைவில் வைத்து ஓட்-டுப்போட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்பு-ணர்வு கருத்துகள் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை