உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

ஈரோடு: தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் நலச்சங்கம் சார்பில், நான்காவது நாளாக நேற்றும், ஈரோடு குமலன்குட்டை பூமாலை வணிக வளாகத்தில் காத்தி-ருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.வட்டார இயக்க மேலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியாளர் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசின் பிற துறையின் கீழ் உள்ள கணக்கெடுப்பு, செயல்பாடுகள், பிரசார போன்ற பணிகளை கூடுதலாக வழங்கக்-கூடாது என வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !