உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செக்கானுார் கதவணையில் நீர் தேக்கும் பணி துவக்கம்

செக்கானுார் கதவணையில் நீர் தேக்கும் பணி துவக்கம்

மேட்டூர், காவிரி குறுக்கே கட்டியுள்ள, செக்கானுார் கதவணையில் தண்ணீர் தேக்கும் பணிகள் துவங்கியுள்ளது.மேட்டூர் அணை அடுத்த செக்கானுாரில் காவிரியாற்றின் குறுக்கே, 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும், 18 ஷட்டர்களுடன் கூடிய கதவணை மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இதில், மேட்டூர் அணை அடிவாரம் முதல் செக்கானுார் வரை காவிரியாற்றில், 0.45 டி.எம்.சி., தேக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படும். கடந்த மாதம், 9ல் பராமரிப்பு பணிக்காக கதவணையில் தேக்கி வைத்த தண்ணீர் ஆற்றின் கீழ்பகுதிக்கு வெளியேற்றப்பட்டது.கடந்த, 25 நாட்கள் நடந்த பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று காலை, ஷட்டர்கள் இறக்கப்பட்டு கதவணையில் தண்ணீர் தேக்கும் பணிகள் துவங்கியது. இரு நாட்களில் முழுமையாக தண்ணீர் தேக்கப்படும் கதவணையில், மின் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ