உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகராட்சியில் இன்று குடிநீர் கட்

மாநகராட்சியில் இன்று குடிநீர் கட்

சேலம், :சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று குடிநீர் வினியோகம் இருக்காது.இதுகுறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் அறிக்கை:மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும், மேட்டூர், தொட்டில்பட்டியில், இயங்கி வரும் தலைமை நீரேற்றத்தில், மோட்டார் பழுது, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளன. அதனால் மாநகராட்சி பகுதிகளில், செப்., 19ல்(இன்று) மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.3 நாட்கள் 'கட்'ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் அறிக்கையில், 'செல்லியம்பாளையத்தில், மேட்டூர் - ஆத்துார் காவிரி கூட்டுக்குடிநீர் பிரதான குழாய் மராமத்து பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அறிவுறுத்தல்படி, வரும், 20 முதல், 22 வரை, குடிநீர் வினியோகம் வழங்க இயலாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை