4 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
ஓமலுார்: குடிநீர் வரி செலுத்தாத, நான்கு வீடுகளில் குடிநீர் இணைப்பை டவுன் பஞ்., அதிகாரிகள் துண்டித்தனர்.ஓமலுார் டவுன் பஞ்., பகுதியில், சொத்துவரி, குடிநீர் வரி, சுங்க வசூல் நிலுவை பணம் ஆகியவற்றை, வசூல் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. 15 வார்டுகளில், 3,500 குடிநீர் இணைப்பு உள்ளது. 70 லட்சம் ரூபாய் குடிநீர் வரி பாக்கி உள்ளது. அத்தொகையை செலுத்திட பலமுறை அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்ட நிலையில், நேற்று, கண்ணனுார் மாரியம்மன் கோவில் அருகே மக்கான் தெரு பகுதியில், நான்கு வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை நேற்று ஓமலுார் டவுன் பஞ்., அதிகாரிகள் துண்டிப்பு செய்தனர். குடிநீர் வரி செலுத்திய பின்பு, மீண்டும் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.