மூதாட்டியை திசைதிருப்பி ரூ.2.40 லட்சம் பறிப்பு ஏ.டி.எம்.,ல் கைவரிசை காட்டியவருக்கு வலை
சேலம்: ஏ.டி.எம்., மையத்தில் மூதாட்டி கவனத்தை திசைதிருப்பி, 2.40 லட்சம் ரூபாய் பறித்த வாலிபரை, போலீசார் தேடுகின்றனர்.சேலம், காமநாயக்கன்பட்டி, ராஜா பட்டறையை சேர்ந்தவர் மகேந்திரன், 65. இவரது மனைவி வசந்தா, 58. இவர்களது மகன் தினேஷ், தனியார் நிறுவனத்தில் டிரைவராக உள்ளார். மகள் நிஷாந்தி, சேலத்தில் செவிலியராக பணிபுரிந்து கொண்டு கல்-லுாரி விடுதியில் தங்கியுள்ளார். வசந்தா, அதே கல்லுாரியில் பிரின்டிங்கில் பணிபுரிந்து கொண்டு மகளுடன் தங்கியுள்ளார்.இவர்களுக்கு சொந்தமான, 600 சதுரடியில் வீடு கட்ட திட்ட-மிட்டு, வசந்தா பி.எப்., பணத்தை எடுக்க விண்ணப்பித்திருந்தார். கடந்த, 12ல் அவரது வங்கி கணக்குக்கு பணம் வந்தது. நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு சாரதா கல்லுாரி சாலையில், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சற்று துாரத்தில் உள்ள, வங்கி ஏ.டி.எம்., மையத்தில், 500 ரூபாயை எடுக்க முயன்றார். அப்போது அவரது பின்னால் நின்றிருந்த ஒருவர், இயந்திரத்தில் கைவைத்து வசந்தாவை நகரும்படி கூறினார். அவரும், 500 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றார். சிறிது நேரத்தில் நிஷாந்தி மொபைல் போனுக்கு உடனுக்குடன், 2 லட்சம் ரூபாய் எடுத்த-தாக குறுந்தகவல் வந்தது. உடனே அவர், வசந்தாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, 500 ரூபாய் மட்டும் எடுத்ததாக தெரி-வித்தார்.போலீசார் அலட்சியம்அதிர்ச்சி அடைந்த வசந்தா, அழகாபுரம் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று புகார் கொடுக்க முயன்றார். விசாரித்த போலீசார், வங்கி கணக்கு எண்ணை முடக்கிவிட்டதாகவும் நாளை வந்து புகார் தெரிவிக்கும்படியும் கூறி அனுப்பினர். ஆனால் நேற்று காலை, 8:00 மணிக்கு, அடுத்தடுத்து, 4 நிமிடங்-களில், 40,000 ரூபாய் எடுத்ததாக குறுந்தகவல் வர, வசந்தா மேலும் அதிர்ச்சி அடைந்தார்.உடனே அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கேட்ட-போது, 'இது சைபர் கிரைம் பிரிவு என்பதால் அங்கு செல்-லுங்கள்' என கூறினர். அவர், அங்கு சென்றபோது, 'இது மோசடி வழக்கு இங்கு வராது. அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லுங்கள்' என கூறி மீண்டும் அங்கேயே அனுப்பினர். வேதனை அடைந்த வசந்தா, மீண்டும் அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் வந்து சைபர் கிரைம் போலீசார் கூறியதை தெரிவித்தார். இதையடுத்து புகாரை பெற்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:ஏ.டி.எம்., மையத்தில் வசந்தா பணம் எடுக்க முயன்றபோது பின்னால் நின்றிருந்த மர்மநபர், ரகசிய குறியீட்டை பார்த்-துள்ளார். தொடர்ந்து வேறு ஏ.டி.எம்., கார்டை, வசந்தாவிடம் கொடுத்துவிட்டு அவரது கார்டை, மர்ம நபர் எடுத்துக்கொண்டார். அந்த கார்டை பயன்படுத்தி பணத்தையும் எடுத்துள்ளார். இதுகு-றித்து வழக்குப்பதிந்து விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.அழுது தவித்த பரிதாபம்புகார் கொடுக்க வந்த மூதாட்டியை, அழகாபுரம் போலீசார், சைபர் கிரைம் பிரிவுக்கு செல்ல அறிவுறுத்தினர். அங்கு சென்ற-போது மீண்டும் அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து மீண்டும் அழகாபுரம் வந்து மூதாட்டி புகார் அளித்தார். ஏற்கனவே, 2.40 லட்சம் ரூபாய் இழந்து பாதிக்கப்-பட்ட நிலையில், அங்கும், இங்கும் அலைக்கழிப்பதாக, மூதாட்டி கண்ணீர் மல்க தெரிவித்தார்.