மேலும் செய்திகள்
திருக்கல்யாண உற்சவம்
09-May-2025
சேலம், சேலம், கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில், வைகாசி தேர் திருவிழா கடந்த, 1ல் தொடங்கியது. தினமும் பல்வேறு உற்சவங்களும், திருவீதி உலாவும் நடந்து வருகின்றன. இதில், நேற்று மாலை சிறப்பு பூஜையுடன் திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. மாலை மாற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து, அழகிரிநாதருக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் வேத மந்திரங்கள் ஓத, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மணக்கோலத்தில் உற்சவ மூர்த்தி, கோவிலை வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.விழாவில், முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜூன் 10, காலை 8:30 மணிக்கு நடைபெற உள்ளது.
09-May-2025