உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2,000 கலைஞர்களுடன் களைகட்டும் நாட்டுப்புறக்கலை மீட்பு திருவிழா

2,000 கலைஞர்களுடன் களைகட்டும் நாட்டுப்புறக்கலை மீட்பு திருவிழா

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை, சாதிப்போர் தமிழ் சங்கம் இணைந்து, இரு நாட்கள், 'நாட்டுப்புறக்கலை மீட்பு திருவிழா - 2025' நேற்று தொடங்கினர். பல்கலை வளாகத்தில் நடந்த விழாவுக்கு துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை வகித்தார். சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்.காவடியாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், நாடக கலைஞர்கள், மேள, தாளம், நாதஸ்வர கலைஞர்கள், தெருக்கூத்து, சிலம்பாட்டம், தெம்மாங்கு பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்றனர். மாணவ, மாணவியர் கண்டு களித்தனர். சங்க நிறுவனர் செந்தமிழ்த்தேனீ, அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ் பங்கேற்றனர்.இரண்டாம் நாளான இன்று, கலைநிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட குழுவினர் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளை மீட்கவும், கலைஞர்களை ஊக்குவிக்கவும், இத்திருவிழா நடத்தப்படுவதாகவும், தமிழகம் முழுவதும், 500க்கும் மேற்பட்ட குழுவினர், 2,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றுள்ளதாகவும், சங்கத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை