உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

தி.மு.க., கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

ஓமலுார்: ஓமலுாரில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில் பட்டிமன்ற பேச்சாளர் லியோனி பேசுகையில், ''ஆங்கிலம் படித்தால் உலகம் சுற்றலாம். ஹிந்தி படி த்தால் இந்தியாவில் மட்டுமே சுற்ற முடியும். மும்மொழி கொள்கையை எதிர்த்து களம் இறங்கியுள்ள நம் முதல்வருக்கு நாம் துணை நிற்போம்,'' என்றார்.தொடர்ந்து ஏழை மக்களுக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரம், அயர்ன்பாக்ஸ், ஹாட் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தொகுதி பொறுப்பாளர் சுகவனம், ஓமலுார் பேரூர் செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதேபோல், தி.மு.க.,வின், தாரமங்கலம் மேற்கு ஒன்றியம் சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம், பணிக்கனுாரில் நடந்தது. சேலம் எம்.பி., செல்வகணபதி, மாற்றுத்திறனாளிகள், மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை