உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலுக்கு நிதி ஒதுக்கியது யார்? பென்னாகரத்தில் தி.மு.க., - பா.ம.க., தள்ளுமுள்ளு

பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலுக்கு நிதி ஒதுக்கியது யார்? பென்னாகரத்தில் தி.மு.க., - பா.ம.க., தள்ளுமுள்ளு

பென்னாகரம்: பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அமைக்க, நிதி ஒதுக்-கியது யார்? என்று, தி.மு.க.,- பா.ம.க.,வினர் வாக்குவாதம் செய்து, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட், 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில், 4.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணி தொடங்கியது. தற்போது, 80 சதவீத பணி முடிந்துள்ளது. இதில் தரைத்தளம் மற்றும் இதர பணிகளுக்கு, பென்னாகரம் பேரூராட்சி பொது நிதியில், 50 லட்சம் ரூபாய் ஒதுக்கி பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., பொது நிதியில் நுழைவாயில் அமைக்க நிதி ஒதுக்கியதாக, முன்னாள் எம்.எல்.ஏ., இன்பசேகரன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் நேற்று பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதையறிந்த பென்னாகரம் பா.ம.க.,வினர், எம்.எல்.ஏ., ஜி.கே.மணி, தொகுதி மேம்பாட்டு நிதி, 39.10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். அவரை அழைக்காமல் தி.மு.க., மறைமு-கமாக பணி செய்வதாக கூறி, 30க்கும் மேற்பட்ட பா.ம.க.,வினர், பூஜை போட இருந்த இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்-போது இருதரப்பினரிடையே வாக்குவாதமாகி, தள்ளுமுள்ளு ஏற்-பட்டது. போலீசார் சமாதானம் செய்தனர். தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர், பூஜையை ரத்து செய்வதாக அறி-வித்து, இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ