உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரிக்கு மழைநீர் வராதது ஏன்? வழித்தடத்தில் கலெக்டர் ஆய்வு

ஏரிக்கு மழைநீர் வராதது ஏன்? வழித்தடத்தில் கலெக்டர் ஆய்வு

பனமரத்துப்பட்டி, சேலம் மாநகர் மக்களின் குடிநீர் தேவைக்கு, 1911ல் ஆங்கிலேயர்கள் பனமரத்துப்பட்டி ஏரியை உருவாக்கினர். சேலத்துக்கு காவிரி குடிநீர் வந்த பின், பனமரத்துப்பட்டி ஏரி குடிநீர் திட்டத்தை, சேலம் மாநகராட்சி நிர்வாகம் கைவிட்டது. 2005க்கு பின், நீர் வரத்தின்றி வறண்ட ஏரி, முள் காடாக மாறியது. இந்நிலையில் சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, பனமரத்துப்பட்டி ஏரிக்கு மழை நீர் வரும் தடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். போதமலை, கிட மலை தொடரில் இருந்து பனமரத்துப்பட்டி ஏரிக்கு மழைநீர் வரும் ஆற்றில் குரால்நத்தம், குரங்குபுளிய மரம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை பார்வையிட்டார். மேலும் ஏரிக்கு மழை நீர் வருவதில் உள்ள தடைகள் குறித்து, நீர் வளத்துறை அதிகாரிகள், சேலம் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி