சத்துணவு நிபுணர் கொலை மனைவி, மகன் சிக்கினர்
சங்ககிரி:சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே பக்காலியூர், அருவங்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; ஊட்டச்சத்து மையம் நடத்தி வந்தார். இவரது மனைவி ராணி, 53. இவர்கள் மகன் அரவிந்த்ராஜ், 30, மகள் கார்த்திகா.ராஜேந்திரன், ராணி கருத்து வேறுபாடால் பிரிந்தனர். இவர்களுக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம் தொடர்பாக பிரச்னை உள்ளது. ராஜேந்திரன், அவரது மையத்தில், கடந்த, 31ல் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சங்ககிரி போலீசார் வழக்குப்பதிந்து, தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். போலீசார் புதுச்சேரியில் இருந்த, கூலிப்படையை சேர்ந்த, ஏழு பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கூலிப்படையை ஏவி, ராஜேந்திரனை கொன்றது அவரது மகன் அரவிந்த்ராஜ் என, தெரிந்தது.இந்நிலையில், 'தந்தையை கொல்ல கூலிப்படையை ஏவியது நான் தான்' எனக்கூறி, அரவிந்த்ராஜ், உடந்தையாக இருந்ததாக ராணி, சங்ககிரி வி.ஏ.ஓ., மோகனிடம் சரணடைந்தனர். இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.