ஏரியில் மண் கடத்திய கும்பல் வருவாய்த்துறை கவனிக்குமா?
ஏரியில் மண் கடத்திய கும்பல்வருவாய்த்துறை கவனிக்குமா?வாழப்பாடி, நவ. 10-வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து புதுப்பாளையம் அருகே, 46 ஹெக்டேரில் சடையன் செட்டி ஏரி உள்ளது. அங்கு கருவேல மரங்களை அகற்றி துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக மண் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள், நேற்று மாலை, 5:00 மணிக்கு ஏரிக்கு சென்றனர். அப்போது, இரு பொக்லைன் வாகனங்களை பயன்படுத்தி, 10க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண் திருட்டு ஜோராக நடந்து கொண்டிருந்தது.ஆனால் மக்களை பார்த்ததும் மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுடன் தப்பிவிட்டனர். இருப்பினும் மண் திருட்டு குறித்த புகைப்படங்களை, வாழப்பாடி வருவாய்த்துறையினருக்கு அனுப்பி, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இனி அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் தெரிவித்தனர்.