மேலும் செய்திகள்
விநாயகா மிஷனில் 'ஹாக்கத்தான் 3.0'
15-Dec-2024
சேலம்: மாற்றுத்திறனாளிகளை கொண்டாடும் விதமாக, விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலை சார்பில், விம்ஸ் மருத்துவமனை வளாகம், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மூலம் பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் துணையுடன், பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.முன்னதாக கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த, 'அடாப்ட் சொசைட்டி' எனும் தன்னார்வல அமைப்பை சேர்ந்த, 32க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், அவர்களது பெற்றோர், உதவியாளர்கள், விமானம் மூலம் சேலம் வரவழைக்கப்பட்டனர். இந்த விமான பயண ஏற்பாட்டை, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் செய்திருந்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமார் வரவேற்றார். விமான நிலைய இயக்குனர் வைதேகிநாதன், மேலாளர் பிரகாஷ் உடனிருந்தனர்.இதையடுத்து கல்லுாரியில், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மூலம், 'கனவின் சிறகுகள்' தலைப்பில் நிகழ்வு நடந்தது. துணைவேந்தர் சுதிர் தலைமை வகித்து பேசினார். இணை வேந்தர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன், தேர்வு கட்டுப்பாட்டாளர் மணிவண்ணன், பல்கலை அறங்காவலர் அன்னபூரணி, தன்னார்வல அமைப்பு செயலர் பன்டாளம் சஜித்குமார், தலைவர் சன்னி பங்கேற்றனர்.பின் துறை மாணவர்களின் தமிழ் பாரம்பரிய நடனம், மாற்றுத்திறனாளிகளின் கேரள பாரம்பரிய நடனம் அரங்கேற்றப்பட்டது. ஏற்பாட்டை, துறை பேராசிரியை தமிழ் சுடர், உதவி பேராசிரியர்கள் தனசேகர், உமா மகேஸ்வரி, ஷில்பா, விக்னேஸ்வரா, அலுவலக பணியாளர்கள் சம்பத், கார்மேகம், பிரின்ஸ் செய்திருந்தனர்.
15-Dec-2024