வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கல்
சேலம்: சேலம், குமாரசாமிப்பட்டியில், தி.மு.க., சார்பில் பொங்கல் விழா, துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. வடக்கு தொகுதி பார்வையாளர் விவேக், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்றனர். அதில் விளையாட்டு போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம், இரண்டாம் பரிசாக அரை கிராம் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேயர் ராமசந்திரன், கவுன்சிலர் சாந்தமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.