மேலும் செய்திகள்
நகராட்சி ஊழியர் வீட்டில் நகை திருட்டு
15-Jul-2025
சேலம்: திருப்பூர், காந்தி நகரை சேர்ந்த, கட்டட கான்ட்ராக்டர் யுவராஜ். இவரது மனைவி உமா மகேஸ்வரி, 46; இவருக்கு உடல் நிலை பாதிப்பால், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒரு விடுதியில் தங்கி, இரண்டு மாதமாக தினமும் சிகிச்சை பெற்று வந்தார். உமா மகேஸ்வரி நேற்று முன்தினம் திடீரென மயங்கியதால், யுவராஜ் ஆம்புலன்ஸ் வரவழைத்தார். மருத்துவ உதவியாளர் பரிசோதனையில் இறந்துவிட்டது தெரிந்தது.இந்நிலையில் விடுதி ஊழியர்களிடம், 'மனைவி உடலை கொண்டு செல்ல பணம் இல்லை. உறவினரிடம் வாங்கி வருகிறேன்' என கூறி சென்றுள்ளார். ஆனால் திரும்பி வரவில்லை. விடுதி நிர்வாக புகாரின்படி டவுன் போலீசார் உடலை கைப்பற்றினர். யுவராஜின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துத. விடுதியில் அவர் கொடுத்திருந்த முகவரியில் விசாரித்தபோது, இரண்டு ஆண்டுக்கு முன்பே அங்கிருந்து காலி செய்துவிட்டது தெரிந்தது. இதனால் யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
15-Jul-2025