உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

சங்ககிரி, சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம் கோயல், சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனியை, சேலம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து,எஸ்.பி., உத்தரவிட்டார்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'விசாரணைக்கான சில குறிப்பட்ட ஆவணங்களை, கார்த்திகேயனியிடம் எஸ்.பி., கேட்டுள்ளார். ஆனால் அதுகுறித்த கோப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் இடமாற்றப்பட்டார்' என்றனர்.மேலும் கொங்கணாபுரம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, கூடுதல் பொறுப்பாக மகளிர் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ