பெண்களை கட்டி போட்டு வீடு புகுந்து கொள்ளை
ஆத்துார்: சேலம் அருகே பெண்களை கட்டி போட்டு துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.சேலம் மாவட்டம், மண்மலையை சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வேணுகோபால், 75. இவரது மனைவியர் தனலட்சுமி, 70, விஜயகுமாரி, 60. மகன் ராம்குமார், மயிலாடுதுறை மோட்டார் வாகன ஆய்வாளர்.நேற்று முன்தினம் இரவு, 7:40 மணிக்கு விஜயகுமாரி வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது, மர்ம கும்பல் விஜயகுமாரி கழுத்தில் கத்தியை வைத்து, வீட்டின் உள்ளே இழுத்து சென்றது.ராம்குமாரின் மனைவி காந்திமதி, 42, அவரது மகன் அதிரூபன் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி, விஜயகுமாரி அணிந்திருந்த 20 சவரன் நகைகள், 10,000 ரூபாயை கொள்ளையடித்தனர். தம்மம்பட்டி போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.