உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தைகளுடன் பெண் தர்ணா

குழந்தைகளுடன் பெண் தர்ணா

சேலம்:சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே உள்ள ஏகாபுரத்தை சேர்ந்தவர் சத்யா, 36. இவர் நேற்று மூன்று குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அங்கு திடீரென நுழைவு வாயில் முன், சத்யா அமர்ந்து தட்டு ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.போலீசாரிடம் சத்யா கூறுகையில், ''எனது கணவர் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். தற்போது நான் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். ஆதரவு இன்றி மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கை நடத்தி வருகிறேன். நான் தி.மு.க., உறுப்பினராக உள்ளேன். எனக்கு வாழ்வதற்காக நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் வாழ உதவி செய்ய வேண்டும்,'' என்றார்.பின் அவரிடம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ