ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
ஆத்துார்:நரசிங்கபுரம், தெற்குகாட்டை சேர்ந்த பரமசிவம் மகன் சஞ்சீவி, 25. கட்டட தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். இரவு, 10:30 மணிக்கு, நரசிங்க-புரம், தில்லை நகரில், சேலம் - விருதாசலம் அகல ரயில் பாதை வழியே நடந்து சென்றார்.அப்போது சேலத்தில் இருந்து, சென்னை எழும்பூர் நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு, உடல் சிதறி உயிரிழந்தார். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.