உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேன் ஏற்றி அண்ணன் கொலை தம்பி புகாரால் தொழிலாளி கைது

வேன் ஏற்றி அண்ணன் கொலை தம்பி புகாரால் தொழிலாளி கைது

வேன் ஏற்றி அண்ணன் கொலைதம்பி புகாரால் தொழிலாளி கைதுஓமலுார், அக். 23-வேனை ஏற்றி அண்ணனை கொலை செய்ததாக, தம்பி அளித்த புகாரில், கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.காடையாம்பட்டி, நடுப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன், 26, நேற்று தீவட்டிப்பட்டி போலீசில் அளித்த புகார் மனு:என் குடும்பத்துக்கும், பங்காளி உறவு முறையான அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம், 29, என்பவருக்கும் நிலப்பிரச்னையில் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம், நானும், அண்ணன் முருகேசன், 27, ஆகியோர், ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்றோம். முருகேசன் ஓட்டினார். பூசாரிப்பட்டியில் உள்ள என் அக்கா வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருத்தோம்.எலத்துார் ஏரிக்கரை அருகே வந்தபோது, அதிவேகமாக வந்த மினி சரக்கு வேன், பைக் பின்புறம் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டேன். முருகேசன் வேனின் பின்புறம் சிக்கியிருந்தார். அப்போது வேனில் இருந்து வந்த செல்வம், மாரிமுத்து ஆகியோர், 'முடிஞ்சிட்டீங்கடா' என சொல்லி, வேன் பின்னால் சிக்கியிருந்த முருகேசன் மீது 'ரிவர்ஸில் வந்து ஏற்றியதில் குடல் தள்ளி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். நான் பலத்த காயத்துடன் உயிர் தப்பினேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இதுதொடர்பாக போலீசார் விசாரித்து, நேற்று செல்வத்தை கைது செய்து, மாரிமுத்துவை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை