மேலும் செய்திகள்
இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் வேலை நிறுத்தம்
17-Apr-2025
வாழப்பாடி:கடனை கேட்டு தரக்குறைவாக பேசியதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார் என, அவரது மனைவி கொடுத்த புகாரில், தனியார் வங்கி ஊழியர் மீது வழக்குப் பதிந்து, அவரை போலீசார் தேடுகின்றனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி, கொட்டவாடியை சேர்ந்த, கூலித்தொழிலாளி வடிவேல், 53; துக்கியாம்பாளையத்தில் வசித்தார். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, அவரது வீட்டில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார்.அவரது மனைவி வள்ளியம்மை, வாழப்பாடி போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதில், 'தனியார் வங்கி ஊழியர்கள் கடன் கேட்டு தரக்குறைவாக பேசியதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்' என கூறியிருந்தார். இதுகுறித்து, வங்கி ஊழியர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:தனியார் வங்கியில், 2021ல், வடிவேல் விவசாய அடமான கடனாக, 5 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். மாதத்தவணை, 12,300 ரூபாயை சரியாக செலுத்தி வந்துள்ளார். நடப்பு மாதம் மட்டும் தவணை செலுத்துவதில், 20 நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள், 2 பேர் வீட்டுக்கு சென்று, வடிவேலுவிடம் பணம் கேட்டு தரக்குறைவாக பேசியதாக புகார் அளித்ததால் விசாரிக்கப்படுகிறது. வடிவேல் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து, அவரது வீட்டுக்கு, கடன் வசூலிக்க சென்ற வங்கி ஊழியர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடுகிறோம். இறந்த வடிவேலுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
17-Apr-2025