அருவியில் குளித்த தொழிலாளி உயிரிழப்பு
தாரமங்கலம், சேலம், நெத்திமேடு, மணியனுாரை சேர்ந்தவர் விஜய், 29. அங்குள்ள கிழங்கு மில்லில் பணிபுரிந்தார். தாரமங்கலம், அணைமேட்டில் சில நாட்களாக வரும் திடீர் அருவியை பார்க்க, நண்பர்களுடன் நேற்று வந்தார். அவர்கள், அருவியின் மேல் பகுதியில் தேங்கிய தண்ணீரில் குளித்தபோது, நீச்சல் தெரியாத விஜய் மூழ்கினார். ஓமலுார் தீயணைப்பு துறையினர், விஜயை, இறந்த நிலையில் மீட்டனர். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.