பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
சேலம், சேலம், பொன்னம்மாபேட்டை, புதுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சக்திவேல், 25. திருமண விழாவுக்கு பூக்கள் அலங்கார தொழில் செய்து வந்தார். நேற்று காலை, 8:30 மணிக்கு, வாழப்பாடி, வேப்பிலைப்பட்டியில் இருந்து, 'ஹீரோ' பைக்கில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அம்மாபேட்டை, காமராஜர் காலனியில் வந்தபோது, அரசு டவுன் பஸ்சை முந்த முயன்றார். அப்போது தடுமாறிய அவர், பஸ்சின் பின்பகுதியில் மோதி விழுந்ததோடு, பஸ் சக்கரத்தில் சிக்கினார். அதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.