உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பலி

விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பலி

ஆத்துார், பெத்தநாயக்கன்பாளையம், தும்பலை சேர்ந்தவர் ராமலிங்கம், 59. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, 'ஜூபிடர்' மொபட்டில், ஆத்துாரில் இருந்து பெத்தநாயக்கன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தென்னங்குடிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற, 'மகேந்திரா' கார், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமலிங்கத்தை, மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று, அவர் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி