மேலும் செய்திகள்
'நல்லா 'மெயின்டெயின்' பண்றாங்க!'
03-Jun-2025
வாழப்பாடி: வாழப்பாடி, வெள்ளாளகுண்டம் அருகே மயிலக்கரட்டை சேர்ந்-தவர் பழனி, 45. 'அடார்னஸ்' தொழில் செய்து வந்தார். அவர், நேற்று காலை, 10:30 மணிக்கு, அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அங்கு விவசாயத்துக்கு பயன்ப-டுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை, மதுபானத்தில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது மகன் ஹரிபிரசாத், பழனியை மீட்டு, காரிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார். அங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பழனி, அதே பகுதியில் உள்ள கணவரை இழந்த பெண்ணுடன், 10 ஆண்டாக நெருங்கி பழகி வந்தார். இதை, அப்பெண்ணின் மகன் கண்டிக்க, பழனி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருப்பினும் விசாரணை தொடர்கிறது' என்றனர்.
03-Jun-2025