உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதையில் தீ வைத்து உயிரிழந்த தொழிலாளி

போதையில் தீ வைத்து உயிரிழந்த தொழிலாளி

ஓமலுார்: ஓமலுார், அலங்கார் தியேட்டர் அருகே வசித்தவர் கண்ணன், 50. பொரி வறுக்கும் தொழிலாளியான இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். மது அருந்தும் பழக்கம் உள்ள கண்ணன், கடந்த, 10ல், அதிக போதையில் வீடு அருகே வந்தபோது குப்பையில் விழுந்துள்ளார். அப்போது கண்ணன், பீடி பற்ற வைத்து தீக்குச்சியை அணைக்காமல் குப்பையில் போட்டுள்ளார். அதில் குப்பை தீப்பற்றி எரிந்ததோடு, கண்ணன் பலத்த காயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை