உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அறுவை சிகிச்சைக்கு பின் இறந்த தொழிலாளி: டிரைவர் மீது வழக்கு

அறுவை சிகிச்சைக்கு பின் இறந்த தொழிலாளி: டிரைவர் மீது வழக்கு

ஆத்துார் :அறுவை சிகிச்சைக்கு பின் தொழிலாளி இறந்த விவகாரத்தில் விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.ஆத்துார், துலுக்கனுாரை சேர்ந்த, கூலித்தொழிலாளி மாயவன், 33. இவர் கடந்த, 20ல், முல்லைவாடி - கல்லாநத்தம் சாலையில், 'ஸ்போர்ட்' பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத மினி சரக்கு வேன் மோதியதில், முகம், இடது கண், மார்பு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம், மாயவன் முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சில நிமிடத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மனைவி ராஜகுமாரி புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகன டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ