மேலும் செய்திகள்
போதை மறுவாழ்வு மையம் சென்றவர் மறுநாளே பலி
15-May-2025
ஆத்துார், ஆத்துார் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை முடிந்த சில நிமிடத்தில், கூலித்தொழிலாளி உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆத்துார் அருகே, துலுக்கனுார் கிராமத்தை சேர்ந்த மருதை மகன் மாயவன், 33, கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த, 20ல் ஏற்பட்ட விபத்தில் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அதே மருத்துவமனையில், அவரது மனைவி ராஜகுமாரி, 29, துாய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று கணவருக்கு, முகத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அழைத்து வந்துள்ளார். மதியம், 12:00 மணியளவில் அறுவை சிகிச்சை முடிந்து, சில நிமிடத்தில் மாயவன் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் புகார் கூறினர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து, ஆத்துார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஜெயலட்சுமி கூறுகையில், ''மாயவனுக்கு, சில தினங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டதில் முகத்தில் சதை பெயர்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இன்று (நேற்று), மதியம், 12:00 மணிக்கு மேல், அவரது தொடை பகுதியில் உள்ள சதையை எடுத்து, முகத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மயக்க நிலையில் இருந்த அவர், அறுவை சிகிச்சை முடிந்த பின் எழுந்ததால், செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டது. மதியம், 2:30 மணியளவில் அவருக்கு இருமல் வந்துள்ளது. உடனடியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், அவரது இருதய துடிப்பு குறைய துவங்கியது. மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளார். தவறான சிகிச்சையால் இறப்பு ஏற்படவில்லை. இழப்பின் ஆதங்கத்தில் தவறான சிகிச்சை என கூறுகின்றனர். மாயவன் இறப்பு குறித்து, மருத்துவ பரிசோதனைக்கு பின், தெரியவரும்,'' என்றார்.
15-May-2025