உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் அடிபட்டு தொழிலாளியின் 2 கால்களும் துண்டிப்பு

ரயிலில் அடிபட்டு தொழிலாளியின் 2 கால்களும் துண்டிப்பு

சேலம்:சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த, நெசவு தொழிலாளி முரளி, 32. நேற்று காலை, அதே பகுதியில் மிலிட்டரி சாலை அருகே, இயற்கை உபாதைக்கு தண்டவாள பாதையை கடக்க முயன்றார். அப்போது சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் வர, அதில் அடிபட்டு, முரளியின் இரு கால்களும் துண்டாகின. அவரது வலது கையில், 3 விரல்கள் சிதைந்தன. அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி