உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குறுக்கே வந்த நாயால் விபத்து:பைக்கில் சென்ற தொழிலாளி பலி

குறுக்கே வந்த நாயால் விபத்து:பைக்கில் சென்ற தொழிலாளி பலி

தாரமங்கலம்:தாரமங்கலம், சேடப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 29. கூலித்தொழிலாளியான இவர் கடந்த, 12ல், 'பேஷன்' பைக்கில் தாரமங்கலத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மதியம், 3:30 மணிக்கு மேட்டுமாரனுாரில் சென்றபோது, நாய் குறுக்கே வர நிலை தடுமாறி விழுந்தார். அதில் தலையில் படுகாயம் ஏற்பட்டதால், மக்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்தார். முருகன் மனைவி சுவாதி புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை