உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவியை மணந்த தொழிலாளி

மாணவியை மணந்த தொழிலாளி

தலைவாசல், தலைவாசல், இலுப்பநத்தம் ஊராட்சி இந்திரா நகரை சேர்ந்த, முருகேசன் மகன் வினோத், 21. சென்னை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் கூலி வேலை செய்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கனிமொழி, 20. டிப்ளமோ நர்சிங் படிக்கிறார். இவர்கள், காதலித்த நிலையில், இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், திருமணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு, வீரகனுார் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தி, காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி