தொழிலாளி மாயம் மனைவி புகார்
நங்கவள்ளி, நங்கவள்ளி, குட்டப்பட்டியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 30. இவரது கணவர் மணிகண்டன், 30. கூலித்தொழிலாளி. சில மாதங்களாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை, 23ல், மனைவியிடம் தகராறு செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன், இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் ஜெயலட்சுமி புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.