மேலும் செய்திகள்
ஊட்டியில் 1,000 பேர் புத்தகம் வாசிப்பு
24-Apr-2025
ஓமலுார்:தொளசம்பட்டியில் உள்ள ஊர்புற நுாலகத்தில், உலக புத்தக தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நுாலக வாசகர் வட்டம், அஹிம்சை சிகரம் அறக்கட்டளை இணைந்து, விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தொளசம்பட்டி பிரதான சாலையில் சென்ற பேரணியில், மாணவ, மாணவியர், 'கைபேசியை சிறையிலிடு; புத்தகங்களை கையிலெடு' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். பின் சந்தை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். நுாலகர் குமார், வாசகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
24-Apr-2025