கூட்டுறவில் உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கலாம்
சேலம், கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும், 11ல் தேர்வு நடக்க உள்ள நிலையில், அதற்கான நுழைவுச்சீட்டை, இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதுகுறித்து, சேலம் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அருளரசு(முழு கூடுதல் பொறுப்பு) அறிக்கை: கூட்டுறவு சங்க பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் சேலம் மண்டலத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு வரும், 11 காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ள எழுத்து தேர்வுக்கான தேர்வறை நுழைவுச்சீட்டு, சேலம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின், https://www.drbslm.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. அதனால் விண்ணப்பதாரர்கள், நுழைவுச்சீட்டை, அக்., 5(இன்று) முதல், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏதும் சந்தேகம் ஏற்பட்டால், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய கட்டுப்பாட்டு அறையை, 0427- - 2415158 என்ற எண்ணில் அழைக்கலாம்.