உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தையுடன் இளம்பெண் மாயம்

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

சேலம், சேலம், செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் மயில்ராஜ், 28. இவர் செவ்வாய்பேட்டையில் உள்ள, ஒரு மளிகை கடையில் லோடு மேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் திவ்யபிரியா, 28, என்ற பெண்ணை எட்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிவிஷ், 8. என்ற மகன் உள்ளார், திவ்யபிரியா அங்குள்ள பைண்டிங் செய்யும் இடத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த, 17ல் ஏற்பட்ட தகராறில் திவ்யபிரியா, தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு வரவில்லை அதிர்ச்சியடைந்த மயில்ராஜ், பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இது குறித்து மயில்ராஜ் அளித்த புகார்படி, செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை