தனியார் பஸ் மீது பைக் மோதி வாலிபர் பலி
சேலம்: சேலம் குமாரசாமிபட்டி ஏ.ஆர். லைனை சேர்ந்தவர் சிவக்-குமார் மகன் சவுந்தர், 23. சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, மொபைல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு புது பஸ் ஸ்டாண்ட் மேம்பாலம் பகுதியில் தனது பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியே வந்த தனியார் பஸ் மீது, வேகமாக சென்ற பைக் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட சவுந்தர் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை, பள்ளப்பட்டி போலீசார் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்-றனர். பின், மேல் சிகிச்கைக்காக சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சவுந்தர் இறந்தார்.தனியார் பஸ் டிரைவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம், பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.