உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்விரோதத்தில் வாலிபர் கொலை;6 பேர் அதிரடி கைது

முன்விரோதத்தில் வாலிபர் கொலை;6 பேர் அதிரடி கைது

சங்ககிரி: சங்ககிரியில், முன் விரோதம் காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.சங்ககிரி மலையடிவாரம், குஞ்சுமாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் மூர்த்தி, 39. சங்ககிரி அருகே கிடையூரை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து மூர்த்தி, தன் நண்பரான சங்ககிரி ஆர்.எஸ்., பகுதியை சேர்ந்த அசோக்குமாரிடம், கனகராஜ் உன் குடும்பத்தை பற்றி தவறுதலாக பேசி வருவதாக கூறியுள்ளார். இதில் கோபமடைந்த அசோக்குமார், கனகராஜை சங்ககிரி சஷ்டி நகருக்கு வா என அழைத்துள்ளார். அங்கு வந்த கனகராஜ், அவரது நண்பர் சரவணன், 40, என்பவரை அழைத்து வந்துள்ளார்.அப்போது அசோக்குமார், மூர்த்தி இருவரும் சேர்ந்து கனகராஜை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். அதை சரவணன் தடுத்துள்ளார். அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சங்ககிரி போலீசார் அசோக்குமார், மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த, 14ல் இரவு 11:00 மணிக்கு சங்ககிரிபவானி ரோட்டில் மயானம் பகுதியில் சென்று கொண்டிருந்த மூர்த்தியை, சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு, சங்ககிரி போலீசார் விசாரித்து முன்விரோதம் காரணமாக மூர்த்தியை கொலை செய்ததாக, கிடையூரை சேர்ந்த கனகராஜ், 34, அவரது கூட்டாளிகள் மேட்டூர் கருப்பு ரெட்டியூரை சேர்ந்த ஹரிஹரன், 43, சங்ககிரி ஆர்.எஸ்., சக்தி நகரை சேர்ந்த ரமேஷ், 42, அருண்குமார், 24, மேட்டூர் தொட்டில்பட்டியை சேர்ந்த சுரேஷ், 37, சன்னியாசிப்பட்டியை சேர்ந்த சங்கர், 52, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை