உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இளைஞர்கள்

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இளைஞர்கள்

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஒன்றியம், அ.புதுார் அரசு மாதிரி பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவியருக்கு இளைஞர்கள் பல்வேறு வித தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, பா.ம.க.,வின் சேலம் தெற்கு மாவட்ட ஊடக பிரிவு தலைவர் மோகன் கூறியதாவது: இளைஞர்கள், மாணவியர் பள்ளிக்கு வரும் சாலையில், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வருகின்றனர். அப்போது, 'வீலிங்' செய்து சாகசத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் அரசு மாதிரி பள்ளிக்கு பல மாணவர்கள் விதிமீறி இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். அதுவும், 3, 4 பேர் அமர்ந்து வேகமாக செல்வதால் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். வெளியூரை சேர்ந்த இளைஞர்கள் கும்பலாக காலை, மாலையில், பள்ளிக்கு பைக்கில் வந்து மாணவியரிடம் கேலி, கிண்டல் செய்கின்றனர். மேலும் டீக்கடைகள் முன் நின்று கொண்டு, மொபைல் போனில், 'செல்பி' எடுக்கின்றனர். அவர்களை கண்டித்தால் கும்பலாக சேர்ந்து மிரட்டுகின்றனர். போலீசாரிடம் புகாரளித்தால் இரு நாட்கள் ரோந்து வருகின்றனர். பின் கண்டு கொள்வதில்லை. அதனால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி