ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ.1.80 கோடி ஒதுக்கீடு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 4 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அரசு ரூ.1.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 132 சுகாதார துணை மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட அரசு ரூ.81.10 கோடி ஒதுக்கியுள்ளது. அதில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கு தலா ரூ.45 லட்சம் வீதம் சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி அருகே அரியாண்டிபுரம், சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டி, மானாமதுரை அருகே ராஜகம்பீரம், திருப்புவனம் அருகே தேளி ஆகிய கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.